ஏப்ரல்முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 1st, 2024

அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற தீர்வு முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு தான் பிரதமராக இருந்த போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியிலும் இந்த ஆண்டும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: