ஏனைய உலக நாடுகளை விட இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Thursday, March 9th, 2023பொருளாதார நெருக்கடியின் போது மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுத்ததாகவும், சுமார் 3.9 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு கடன் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்திய அரசாங்கம் துணிச்சலான முடிவுகளை எடுக்க முன்வந்தது மட்டுமல்லாமல், இந்திய மக்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் என்று குறிப்பிட்டார்.
இலங்கையை காப்பாற்ற இந்தியாவின் தலையீடு மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாகவும், அலி சப்ரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை தன்னிச்சையான செயற்படுகிறது – குற்றம் சுமத்துகின்றது தனியார் போக...
அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி விசேட விடுமுறை!
கொரோனா வைரஸ் தாண்டவம்: இலங்கையில் பதிவானது முதல் மரணம்!
|
|