ஏனைய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் –  அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!

Monday, March 13th, 2017

தினேஸ் குணவர்தனவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை போன்று ஒழுக்கயீனமாக செயற்படும் ஏனையவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைமுக மற்றும் கடற்றொழில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் மற்றும் பொதுமக்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அவ்வளவு நல்ல நிலையில் இல்லை. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

Related posts: