“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பில் அனைவரும் கலந்து கொள்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

Saturday, October 8th, 2016

விபத்துக்களை தடுத்து மனித உயிர்களைப் பாதுகாக்க நான்கு கோரிக்கைகளை நாட்டின் தலைவர்களிடம் முன்வைத்து வைத்தியர்களால் எதிர்வரும் 10ஆம் திகதி முன்னெடுக்கப்படும் “எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிற்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அன்றையநாள் முற்பகல் 10 மணியிலிருந்து 11 மணிவரை பாடசாலை நுழைவாயிலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டமில்லாமல் விபத்தினால் ஏற்படும் விபரீதங்களை விளக்கும் பதாதைகளுடன் அமைதியாக எழுந்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Ceylon-Teachers-union-logo_CI

Related posts: