“எழுக தமிழ்” ’பேரணிக்கு யாழ்.பல்கலை ஆதரவு!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள “எழுக தமிழ்” ’பேரணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும், ஊழியர் சங்கமும் ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில் மாணவர்களுக்கான பீடங்களின் ஒன்றியத்தினர்களாகிய நாமும் பல்கலைக்கழக சமூகமாக இணைந்து இப்பேரணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது சமூகத்தின் இருப்பினை நிலை நாட்டிக்கொள்ளவும், எமது கோரிக்கைகளை ஒற்றுமையாக அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்தும் அரசியல்கட்சி பிரதேசபேதங்களை மறந்து தமிழர்களாக முற்றவெளியில் ஒன்றினையுமாறு அனைத்து தமிழ் மக்களையும் வேண்டி நிற்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சமாசம்!
இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு - அ...
|
|