எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைதான இந்திய மீனவர்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.
Related posts:
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக, மனித வளத்தை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை!
நாட்டில் மேலும் 23 கொரோனா உயிரிழப்புகள் பதிவு - பாதிப்பு எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் ...
ஐநாவின் வெளிநாட்டு அமைச்சர் மட்டத்திலான மகாநாடு ஆரம்பம் - அரச தலைவர்கள் மகாநாடு நியூயோர்க் நகரில் நா...
|
|