எல்லை நிர்ணய மேன்முறையிட செய்யப்பட்ட அறிக்கை 17ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சரிடம்கையளிப்பு!

Tuesday, January 10th, 2017

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு செயற்பாட்டு அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி தன்னிடம் வழங்குமாறு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்று கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விகிதாசார முறையின் கீழ் நடத்த எந்தவொரு கட்சியும் இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் மூவர் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் அறிக்கையை பெற்றுக் கொண்டால், அது நாட்டின் சட்டத்தை மீறும் செயலாகும் எனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

1356458810faizar

Related posts: