எல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா!

Sunday, November 20th, 2016

எல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்றத்தில் தெரிவித்துளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் பாராளுமன்றம் உள்ளிட்ட மேலும் 22 விடயங்கள் தொடர்பிலான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில்  நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றுகையில்

தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சவில்லை உள்ளுராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் பணிகள் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாக காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிர்ணயம் தொடர்பில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது சரி செய்யப்படாததனால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சென்றனர். உள்ளுராட்சி நிறுவனங்களின் எல்லைகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் சிபார்சுகள் கிடைத்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கு தயாராகவுள்ளோம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து உள்ளராட்சித் தேர்தல் விரைவாக நடத்தப்படுமென்று தெரிவித்தார்.

4a087d584ac6526689f2881924b95645_XL

Related posts: