எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய பொறுப்பேற்பு!

Friday, December 11th, 2020

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜெயலத் ரவி திசாநாயக்க என்பவரும் பி.எச்.டி .பிரேமசரி என்பவரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான தேர்தல் தொகுதிகளை மீண்டும் வரையறை செய்வது தொடர்பாகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த தேசப்பிரிய தமது பதவிகளை ஏற்றுக்கொண்டார்.

மஹிந்த தேசப்பிரிய 2020 நவம்பர் 13 ஆம் திகதி இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் என்ற பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதுவரை காலமும் சுமார் 37 வருடங்கள் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: