எல்லை நிர்ணய அறிக்கை 17ஆம் திகதி அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்க அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் கமால் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்கும் நோக்கில் அந்த அறிக்கை அரசாங்க அச்சகத்திடம் எதிர்வரும் 17ஆம் திகதி ஒப்படைக்கப்படும். இந்த அறிக்கையின் சிங்கள மொழிமூல அறிக்கையின் எழுத்து மற்றும் அச்சுப் பிழைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. எனினும் ஆங்கில மொழியிலான அறிக்கையின் எழுத்து மற்றும் அச்சுப் பிழைகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
எல்லை நிர்ணய அறிக்கையின் தமிழ் பிரதியில் 500 பிழைகளும், ஆங்கில பிரதியில் 300 பிழைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களினதும் எல்லை நிர்ணயம் தொடர்பிலான அறிக்கைகள் மூன்றுமொழிகளிலும் வெளியிடப்பட உள்ள காரணத்தினால் அதற்கு சில காலம் தேவைப்படும் என கமால் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|