எல்லை நிர்ணய அறிக்கை பெப். 4 ஆம் திகதி கையளிப்பு!

மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகளின் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்தார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஐவர் அடங்கிய குழுவை நியமித்திருந்தார். இந்தக் குழு எல்லை நிர்ணயத் தயாரிப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பில் குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்ததாவது: எமது குழுவுக்கு 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. குறுகிய காலப் பகுதியில் 25 மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
மூன்று மொழிகளிலும் அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெறுகின்றது.
எமது குழுவின் அறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கையளிக்கப்படவுள்ளது என்றார்.
Related posts:
|
|