எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகள் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

Tuesday, January 31st, 2017

தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகளோ பாரிய தவறுகளோ இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்த பாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நடத்துவதில் உள்ள தாமதம் மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேர்தல்களுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே வகைகூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விதிகள் மற்றும் அதற்கான சூழலை ஏற்படுத்தும் வரை தம்மால் போட்டியொன்றை நடத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணை யாளர் கூறியுள்ளார்.

இதேவேளை எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று உச்ச நீதிமன்றத்தில் உறுதி வழங்கியிருந்தார்.

17075

Related posts:


எரிபொருள் - மின் பாவனையை சிக்கனப்படுத்த அரச நிறுவனங்களுக்கு பொது சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறு...
இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வௌியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்...
விவசாய ஆராய்ச்சி - உற்பத்தி உதவி அதிகாரிகளுக்கு வதிவிடங்களிலேயே இடமாற்றம் - அமைச்சர் மகிந்த அமரவீரவா...