எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச இரு அமைச்சர்கள் இந்தியா பயணம்!
Thursday, September 8th, 2016இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாட எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீன்பிடி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் அமையவுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதைத் தடுப்பது தொடர்பில், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாய்கள் நாட்டுக்கு நஸ்டம் ஏற்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வாரத்தில் 600 மெற்றிக்தொன் வரையான மீன்கள் இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பரப்பில் இருந்து பிடிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் 50,000 மீனவக் குடும்பங்கள் வடக்கில் பாதிப்பை எதிர்நோக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|