எல்லை தாண்டிய 20 இந்திய மீனவர்கள் விடுதலை!

Thursday, December 28th, 2017

இலங்கை கடல் எல்லை பகுதிகளில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் குறித்த இந்திய மீனவர்கள் மீண்டும் ஒப்படைக்கும் பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நேற்று நடைபெற்றது.

மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையின் ‘அமேயா’ கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சீஜி 404 கப்பல் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: