எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!

Sunday, January 8th, 2017

 

எல்லைதாண்டி  மீன்பிடியில் ஈடுபட்டு வந்த ஆறு இந்திய மீனவர்களை நெடுந்தீவு பகுதியில் வைத்து  இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் ஜகதாப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டு யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து ஒரு டோலர் படகு, மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் இன்று யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

crime-arrest-handcuffs-jpg

Related posts: