எல்லைதாண்டிய மீன்பிடி: 18 பேர் கைது!
Monday, June 24th, 2019சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 18 பேர் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – பெக்பே மற்றும் உப்பாறு கடற்பரப்புக்களில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – பெக்பே பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் இடையே சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர், 4 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ள 4 படகுகளில், இரண்டு படகுககள் ஒரே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 519 கிலோ கிராம் மீன் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனுடன் கடற்படையினர், திருகோணமலை – உப்பாறு பகுதியில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 261 கிலோ கிராம் மீன் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சீன துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Related posts:
|
|