எல்லைதாண்டிய மீன்பிடி – 13 தமிழக மீனவர்கள் கைது!

Thursday, February 21st, 2019

சட்டவிரோதமாக அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக, தமிழக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை – ஜகதா பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த கைதை இலங்கை கடற்படையும் உறுதி செய்துள்ளது.

இதனிடையே, கடந்த செவ்வாய்கிழமை தமிழக கடற்பரப்பில் வைத்து 25 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: