எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

Sunday, January 28th, 2018

எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு(27) இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களின் இரண்டு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts: