எலிக் காய்ச்சலால் கிளிநொச்சியில் ஒருவா் பலி !

Thursday, November 17th, 2016

 எலிக் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சியில் ஒருவா்  மரணமடைந்துள்ளார்  என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13 ஆம் திகதி வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த 57 வயது நிரம்பிய விவசாயியே எலிக் காய்ச்சல் காரணமாக  நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.

எனவே இது தொடா்பில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் குறிப்பாக விவசாயிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார துறையின் கேட்டுக்கொண்டுள்ளனா்.

எலிக்காய்ச்சல்  ஒரு பக்றீரியா எனும் நுண்ணுயிர் வகையைச் சேர்ந்த கிருமியால் உருவாகிறது.இக் கிருமி தொற்றிய எலிகளின் சிறுநீர் ஊடாகவே அந்த பக்றீரியா வெளிச்சூழலுக்கு வந்து சேர்கிறது.இவ்வாறு வெளியேறிய பக்றீரியாவானது வயல்களில் காணப்படும் சிறு கிடங்குகளில் நிற்கும் நீரிலும், வயல்களில் தேங்கியுள்ள நீர்ப்பரப்புகளிலும் தங்கிவிடுகிறது.

இவ்வாறு தங்கிவிடுகின்ற பக்றீரியா  ஏற்கெனவே தோலில் இருக்கும் காயங்கள் மற்றும் வயலில் வேலைசெய்யும்போது ஏற்படக்கூடிய சிறு தோல் சிராய்ப்புக் காயங்கள், புண்கள், தோல் உராய்வுகள் என்பன வழியாக மனித உடலுக்குள்  நுழைகிறது.வயல்களுக்கு அண்மையில் நீர்தேங்கியுள்ள குளம் குட்டைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலைகளில் காணப்படும் பக்றீரியாவானது கண்களில் உள்ள மென்சவ்வுகள் ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வயல்களில் இறங்கி வேலைசெய்யும் விவசாயிகளுக்கு இந்த நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. அத்தோடு   வேறுதேவைகளுக்காக வயல்களில் இறங்கும் எவருக்கும் இந்த நோய் தொற்றும் அபாயம் காணப்படகிறது என்றும் தெரிவிக்கின்றனா்.

எலிக்காச்சல் நோய்க்கான அறிகுறிகளாக காய்ச்சல், உடம்பு உளைச்சல், அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு,  அல்லது உடல் அலுப்பு, போன்ற     பிரதான நோய் அறிகுறிகளுடன்   கண் சிவத்தல்,    சத்தி (வாந்தி) கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்   சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,    சிறுநீர் வெளியேறுவது குறைதல்ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், சில நோயாளிகளுக்கு எந்த ஒரு குணம் குறியும் தென்படாது எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனா்.

160909_POL_Trump-Putin.jpg.CROP_.promo-xlarge2

Related posts:

திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறைக்கப்பட்டது நிதி - கிராம அபிவிருத்திக்கு ரூ.100 மில்லியனே தரப்பட...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில்...
6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்! – ஜனாதிபதி ஊடகப்பிரிவு த...