எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, March 27th, 2019

தற்போது எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 13 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

எனவே மக்கள் பற்றைகள், தோட்டங்கள், புற்தரைகள் வெளியிடங்கள் செல்லும் போது அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: