எரிவாயு விலையை திருத்த எந்தவொரு அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

Tuesday, May 4th, 2021

எரிவாயு விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவு தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை உயர்வு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்து வருகின்ற போதிலும், இலங்கையில் எரிவாயு விலையை திருத்த எந்தவொரு அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: