எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு – அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவிப்பு!

Sunday, August 8th, 2021

அடுத்த வாரத்தினுள் சந்தையிலுள்ள எரிவாயு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன் லாஃப் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியதால் சுமார் 20 வீத நுகர்வோர் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் லாஃப் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நாளாந்த எரிவாயு சிலிண்டர் விற்பனையை 80 ஆயிரத்திலிருந்து 1 இலட்சம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண அடுத்த வாரத்தினுள் சந்தையிலுள்ள எரிவாயு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

Related posts:

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது - தொற்று நோயியல...
இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அமைச...
இலங்கை பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவா...