எரிவாயு பற்றாக்குறை : 1000 பேக்கரிகளை மூடும் நிலை – பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!

Thursday, November 7th, 2019

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள 750 முதல் 1000 பேக்கரிகள் தொடர்ந்து செயல்படுவது கடினம் எனவும் அவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.

பேக்கரி உற்பத்திகளில் 90% ஆனவை சமையல் எரிவாயுவின் உதவியுடன் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.