எரிவாயு தட்டுப்பாடு இரண்டு வாரங்களின் பின்னர் நீங்கும்!

Wednesday, December 29th, 2021

தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

எரிவாயுவைத் தாங்கிவந்த கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதுடன், சில பகுதிகளுக்கு போதுமான அளவு எரிவாயு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிணங்க தங்களுக்கு போதுமான அளவு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை நுகர்வோரும், எரிவாயு விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: