எரிவாயுவுடன் கூடிய கப்பல் இலங்கை வந்தடைந்தது – நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022

3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறப்பிடத்தக்கது.

இதேவேளை 7,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 3,600 மெற்றிக் தென் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை (27) நாட்டை வந்தடையவுள்ளது.

இதேவேளை, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதன் காரணத்தினால் நாளாந்தம் தமக்கு சுமார் 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: