எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களால் பாதிப்புற்றோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

நாடு முழுவதும் பதிவாகிய எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருடன் தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக, அகில இலங்கை நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை நுகர்வோர் ஒன்றியம் இராஜாங்க அமைச்சரிடம் சமர்ப்பித்த யோசனைகளின் பிரகாரம் 500 ஆயிரம் ரூபாவை வழங்குவது குறித்தும், அண்மைய எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்துகளுக்கான முழுப்பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும், நுகர்வோரை பாதுகாக்கும் பொறுப்பை மாத்திரமே தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|