எரியும் காட்டுத்தீ – போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்!

Friday, December 15th, 2017

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு தெற்கு கல்போர்னியாவில் இருந்து இலட்சக்கணக்கிலான மக்கள் வெளியேற்றப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 700 க்கு மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமாகியுள்ளதாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் வடக்கே வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள 50,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பிடித்து எரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இங்கு பரவி வரும் காட்டு தீயை அணைகக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு வாரமாகியும் காட்டுத் தீ அணைக்கப்படாததால் பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் வீடுகளை விட்டு அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்ற்னர்.

Related posts: