எரிபொருள் வீண் விரயத்தை கட்டுப்படுத்த புதிய எரிபொருள் கட்டமைப்பு – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு!

Wednesday, January 1st, 2020

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் ஏற்படும் எரிபொருள் வீண் விரயத்தை கட்டுப்படுத்த புதிய எரிபொருள் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருட ஆரம்பம்முதல் இந்த புதிய எரிபொருள் கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இ.போ.ச பஸ்களில் எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய புதிய எரிபொருள் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் வீண் விரயத்தை கட்டுப்படுத்தி பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துமாறு பஸ் சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: