எரிபொருள் விலை சீர்திருத்தம் !

Wednesday, October 10th, 2018

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை சீர்திருத்தம் இன்று(10) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான விபரம் நிதியமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால், கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் இன்று வரை டீசல் மற்றும் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விலை நிர்ணயக் குழுவினால் எரிபொருள் விலைத்திருத்தத் தீர்மானம் இன்று(10) அறிவிக்கப்படும் என நிதியமைச்சர், நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Related posts: