எரிபொருள் விலை குறைப்பு : பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா?

Friday, November 16th, 2018

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

பேருந்து தொழிற்துறையை நடாத்திச் செல்வதற்கான செலவீனங்கள் அதிகரித்துள்ள நிலையில் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் பேருந்து பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் தமது நிறைவேற்றுக் குழு கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அகில இலங்கை பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: