எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை – தனியார் பேருந்து சங்கம்!

கடந்த 10 ஆம் திகதிமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில் –
“டீசல் விலையானது ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் பேருந்து தொழிலுக்கு தாக்கம் எதுவும் இல்லை.என்றாலும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தான் பாவனைக்கு உகந்தது..” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
சிறைக்காவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!
வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் - அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல...
|
|