எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமுமில்லை!

Thursday, October 27th, 2016

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நேற்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இவ்வருடத்திலேயே வரலாற்றில் அதிக லாபம் ஈட்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தனிப்பட்ட நலன்களுக்காக செயற்பட்டதில்லை. மக்களின் நலனையே அரசாங்கம் எப்பொழுதும் முதன்மைப்படுத்துகின்றது எனவும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

petrol

Related posts: