எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

பெட்ரோலிய பொருட்களிற்கான விலைகளை அதிகரிப்பதை தவர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தேசிய பொருளாதாரம் முன்னர் ஒருபோதும் இல்லாத பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து நன்கு அறிந்துள்ளபோதிலும் வேறுவழி எதுவும் இல்லாததன் காரணமாக அரசாங்கம் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மத்திய வங்கி எரிசக்தி அமைச்சு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் கலந்தாலேசித்த பின்னரே விலை அதிகரிப்பு குறித்த முடிவை எடுத்தோம் எனலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு அனைத்து பொருட்கள் சேவைகளையும் பாதிக்கும் இறுதியில் அவற்றின் விலைகளை அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எரிபொருள் சந்தையில் காணப்படும் தளம்பல் நிலை அரசாங்கத்திற்கு விலை அதிகரிப்பை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|