எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சிறந்த நிர்வாகத்துடன் முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்து!

Saturday, July 30th, 2022

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நல்ல கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை உரிய திணைக்களங்களின் சரியான ஒருங்கிணைப்புடன் தீர்த்து வைக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

606 லீற்றர் பெற்றோல் மற்றும் 6,610 லீற்றர் டீசல் இதன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: