எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் கைச்சாத்து!
Saturday, July 15th, 2023இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும் கைச்சாத்திட்டுள்ளன.
சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சினோபெக் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கவும், எரிபொருளை சேமிக்கவும் மற்றும் எரிபொருள் நிலையங்களை அமைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இதற்காக நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து அதன் மூலம் இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவி தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இணைக்கும் வலையமைப்பை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் இலக்கம் 17இன் படி, சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் 20 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்பந்தத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|