எரிபொருள் விநியோகிக்க முன்னுரிமையளித்துள்ள துறைகள் தொடர்பில் விளக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

எரிபொருளை விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜூன் 27 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 10 ஆம்திகதிவரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|