எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது – கனிய எண்ணெய் தொழிற்சங்கம்!

Monday, July 1st, 2019

நேற்று நள்ளிரவுமுதல் இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் கனிய எண்ணெய் கிளை தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக புதிதாக குழாய்களை பொருத்தும் போது முகத்துவாரம் – மஹவத்த பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் ரவீ கருணாநாயக்க பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது பிரச்சினைக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் கனிய எண்ணெய் கிளை தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சிக்கல் இல்லை என மின்சக்தி அமைச்சர் ரவீ கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: