எரிபொருள் வழங்கலில் முறைகேடா – பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

Friday, July 1st, 2022

வட பகுதியில் எரிபொருள் முறைகேடு தொடர்பில் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு முறைப்பாடு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய,  எரிபொருள் முறைகேடு தொடர்பில் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்ய 0776344246 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் வழங்கலில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றால் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கீழ் செயற்படும் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாக மேலுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எரிபொருள் பதுக்கல், பாரபட்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது தகவல்களை அந்த தொலைபேசி ஊடாக வழங்க முடியும்.

யாழ்.மாவட்டத்தில் அத்தியாவசிய சேவை வழங்குவதற்கான எரிபொருள் விநியோகத்தை இராணுவத்தின் கண்காணிப்பில் செயல்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: