எரிபொருள் மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023

விவசாயத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியம் கிடைக்காத பகுதிகள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்குனகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த அமரவீர அங்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: