எரிபொருள் பற்றாக்கறை – யாழ்ப்பாணத்திலும் முடங்கிவரும் பொதுப் போக்குவரத்து சேவைகள் – அவதியுறும் மக்கள்!

Friday, July 1st, 2022

எரிபொருள் பற்றாக்கறை காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது சேவைகளை கைவிட்டும் மட்டுப்படுத்தியும் உள்ளதால் போக்குவரத்து சேவையை பெறுவதில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அண்மைய நாள்களில் இவ்வாறான நிழல அதிகரித்து காணப்படுகின்றது.

குறிப்பாக அச்சுவேலி – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத நிலை காணப்படுகின்றது. இதேவேளை தற்போது சேவையில் ஒரு சில பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.

அதேவேளை பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கு  டீசல் தட்டுப்பாடே காரணம் எனவும் தனியார் பேருந்து வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தான் போக்குவரத்து சேவையிலிருந்து விலகி உள்ளதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பாடசாலை போக்குவரத்து சேவை, அத்தியாவசிய சேவைகளிலிருந்து தாம் விலகி உள்ளதாக சாரதிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் பேருந்து நடத்துனர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி, நடத்துனர் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தாம் தற்பொழுது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி வழித்தடத்தில் 60 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற பொழுதிலும் தற்போது ஆறு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றன.

தாம் கோண்டாவில் பேருந்து சாலையில் டீசலை பெறுவதற்காக பல நாட்களாக காத்திருக்கின்ற பொழுதும் தமக்கான டீசல் இதுவரை கிடைக்க பெறவில்லை என்று அவர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: