எரிபொருள் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் செய்திகள் வெயியாகியுள்ளன.
இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருநாடுகளிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், வளைகுடாவில் உள்ள எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடுகளிடமிருந்து எண்ணையை நேரடியாக இறக்குமதி செய்வதற்கான தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரச தலைவர் விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தற்பொழுது கடுமையான எரிபொருள் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதுவரை காணாத எரிபொருள் வரிசைகள் நாடு முழுவதும் நீண்டு நிற்கின்றது. இந்நிலையில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கட்டார் விஜயம் செய்து கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|