எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் அமைதியின்மையை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும் – பொலிசாருக்கு துறைசார் அமைச்சு அறிவுறுத்து!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையிலும் போராட்டங்களின் போதும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
எவ்வாறாயினும், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமைச்சர் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|