எரிபொருள் நிரப்பும் நிலையம் மூடப்பட்டிருந்ததால் உடன் அறிவிக்கவும் !

Monday, November 6th, 2017

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தும், பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பேராசிரியர் பிரசன்ன பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வழமை போன்று எரிபொருளை விநியோகிக்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமது பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் மூடப்பட்டிருந்ததால் அது தொடர்பான தகவல்கள் அறிவிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு நிலையங்களை மூடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. தரம் குறைவான ஒரு தொகை பெற்றோலுடன் வந்த கப்பலை திருப்பி அனுப்ப ஏற்பட்டதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பேராசிரியர் பிரசன்ன பெரேரா மேலும் கூறினார்.

Related posts: