எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பூட்டு!

திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக அதன் ஊழியர்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியிலிருந்து தவிர்ந்து வருகின்றனர்.நேற்று நள்ளிரவு (24) முதல் இப்போராட்டம் அமுலுக்கு வருவதாக, அவ்வொன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்திருந்தார்.
அத்துடன் தற்போது நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்திருந்ததோடு, இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமை காரணமாகவே தாங்கள் இம்முடிவுக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்
இதன் காரணமாக நேற்று (23) இரவு, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது.
Related posts:
|
|