எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை – யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என மாவட்டச் செயலர் அறிவிப்பு!
Tuesday, November 16th, 2021யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் திரண்டிருந்தனர்.
சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றுமுதல் 50 நாட்களுக்கு மூடப்பட்டது. இந்த தகவல் வெளியானது முதல் யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தமையை இன்றும் காண முடிந்தது.
இதேவேளை வாகனத் தாங்கிகளில் எரிபொருளை நிரப்பியமைக்கு மேலதிகமாக போத் தல்களிலும் எரிபொருளை மக்கள் கொள் வனவு செய்தமையை அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இதே நிலை மையே காணப்பட்டது. இதேவேளை, நேற்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டும் இருந்தமையைக் காண முடிந்தது.
இதேவேளை சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற வகையில் போதுமான எரிபொருள் நாட்டில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மகேசன், எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்புவதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக நடைபெறுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|