எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை – இன்று எரிபொருள் விலை குறைக்கப்படும் உனவும் எதிர்பார்ப்பு!

Monday, August 15th, 2022

QR குறியீட்டின் கீழ் பெறப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு 12:00 மணிமுதல் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, QR குறியீட்டின்படி கடந்த வாரம் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அதே அளவு எரிபொருள் இந்த வாரமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தரவு பகுப்பாய்வின் பின்னர் எதிர்வரும் வாரத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே அளவு எரிபொருளை இந்த வாரத்திற்கும் வழங்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீற்றர் பெற்றோலும் முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோலும் வேன்களுக்கு 20 லீற்றர் பெற்றோலும் கார்களுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்கப்படவுள்ளது.

இதேநேரம் லொறிகளுக்கு 50 லீற்றர் டீசலும். பேருந்துகளுக்கு 40 லீற்றர் டீசலும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எரிபொருள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


வடக்கு கிழக்கில் மேலும் 10000  பேருக்கு வீடுகள் அமைக்கப்படும் - மீள்குடியேற்ற அமைச்சின் சௌலாளர் சிவஞ...
அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்...
ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக நாளையதினம் கைய...