எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளைமுதல் நடவடிக்கை –போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சி எனவும் எச்சரிக்கை!

Sunday, May 22nd, 2022

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுமென்று பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நாளை விசேட வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

இதனிடையே

சிலர் அத்தியாவசிய சேவையெனத் தெரிவித்து போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சிக்கும் ,மோசடி சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை,அம்புலன்ஸ் சேவை அத்தியாவசிய சேவை என்பதனால் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கும் விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்  மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் மக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: