எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் – எரிசக்தி அமைச்சர் வலியுறுத்து!

எரிபொருளின் விலைகள் உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 89 டொலர்கள் எனவும் ஏழு ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு விலை உயர்வு பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் மாதமொன்றுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 500 மில்லியன் டொலர் தேவைப்படும் அதேவேளை, ஏற்றுமதி வருமானம் 750 டொலர்களாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் இந்த நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பெப்ரவரியில் குளிர்காலம் தொடங்கும் நிலையில், குளிர் நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால் மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை நெருங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை இலங்கையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் எண்ணெய் கூட்டுத்தாபனம் வரம்பற்ற நட்டத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்’
இதேவேளை நாட்டில் விற்பனை செய்யப்படும் டீசல் லீற்றர் ஒன்றினால் 30 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் “நன்றாக சாப்பிட்டு, குடித்துவிட்டு உணவை விரயமாக்கி அவற்றை குப்பை கூடையில் வீசிக் கொண்டே மக்களிடம் சிக்கனமாக இருக்குமாறு கோரினால் அது மக்களுக்கு கோபம் வரும், எனவே சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|