எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Monday, March 11th, 2019

எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று(11) அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை தினம் என்பதால் இன்று எரிபொருள் விலை சூத்திரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இன்று எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: