எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கப்பல்கள் நாடு திரும்பின!
எந்த பிரதேசத்திலும் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க பின்நிற்கமாட்டோம் - இராணுவத் தளபத...
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
|
|